உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசியல் கட்சி பதிவு செய்ய டில்லி சென்றாரா தனுஷ்...?

அரசியல் கட்சி பதிவு செய்ய டில்லி சென்றாரா தனுஷ்...?

நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் இப்போது நற்பணி இயக்கமாக மாறிவிட்டது. விரைவில் அரசியல் கட்சியாக மாறப்போகிறது என தகவல்கள் தொடர்ந்து வருகின்றன. சில வாரங்களாக இதற்கான பணிகள் நேரடியாக, மறைமுகமாக வேகம் எடுத்து வருகின்றன. இந்நிலையில், நடிகர் தனுஷ் டில்லி சென்று இருக்கிறார். அங்கே பல அரசியல் விஷயங்களை முன்னெடுக்கப்போகிறார். குறிப்பாக, தனது கட்சியை பதிவு செய்யப்போகிறார். சில முன்னணி அரசியல் தலைவர்களை சந்தித்து பேசப் போகிறார். அரசியல் வியூகங்கள் சிலரிடம் ஆலோசனை கேட்கப்போகிறார் என செய்திகள் கசிகின்றன.

ஆனால், தனுஷ் தரப்பு அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை. அரசியல் கட்சியை பதிவு செய்ய அவர் டில்லி செல்ல வேண்டியது இல்லை. அவர் டீம் போனாலே போதும். அவர் இப்போது என்ன செய்தாலும் அது பரபரப்பாகிறது. இப்போதைக்கு அடுத்த மாதம் 20ம் தேதி வர உள்ள ஓம் படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே அவர் இருக்கிறார்.

ஜெயிலர் 2 படத்துடன் ஓம் மோதுவாக இருந்தது. ஆனால், அவர் வசூல், அரசியல், குடும்பம் என பல விஷயங்களை மனதில் கொண்டு பட ரிலீஸ் தேதியை மாற்றிவிட்டார். கர படம் வெற்றி பெறாத நிலையில், சினிமாவில் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சினிமாவில் வெற்றி பெறாமல் அரசியலுக்கு போனால் கிண்டல், கேலி வரும் என்பதால் பட வெற்றியில் கவனம் செலுத்துகிறார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. அதனால் இப்போதைக்கு தீவிர அரசியல் இல்லை என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !