உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் திலீப்பின் 153வது படம் அறிவிப்பு

நடிகர் திலீப்பின் 153வது படம் அறிவிப்பு

மலையாள நடிகர் திலீப் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‛ப ப ப' திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. திரையுலகில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி இருந்த அவருக்கு அதிலிருந்து விடுதலை கிடைத்தது மிகப்பெரிய ரிலாக்ஸாக அமைந்தது. இந்த நிலையில் தனது அடுத்த அடுத்த படங்களை அறிவித்து வருகிறார் திலீப். சில நாட்களுக்கு முன்பு கூட கத்தாரில் ரசிகர்களின் சந்திப்பின்போது ஷாஜி கைலாசின் மகன் ஜெகன் ஷாஜி கைலாஷ் டைரக்சனில் நீக்கம் என்கிற படத்தில் நடிப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது தனது 153வது படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார் திலீப். படத்திற்கு ஹனோக் என பெயரிட்டுள்ளனர். போஸ்டரில் ஒரு கொசு போன்ற பூச்சி இடம் பெற்றுள்ளது. கேப்ஷனில் மேன் இன் தி மிஸ்ட் என குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக படம் பற்றி திலீப் வெளியிட்ட போஸ்டரில் விசாரணை துவங்குகிறது என்கிற வாசகம் இடம் பெற்றது. இந்த படம் ஒரு துப்பறியும் பின்னணியில் உருவாகும் என தெரிகிறது. இன்று ஆலப்புழாவில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !