நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு : நலம் விசாரித்த துணை முதல்வர்
பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப். தமிழில் ‛ஆரண்யகாண்டம்', ரஜினியின் ‛கோச்சடையான்' மற்றும் ‛ஜெயிலர் 1, 2' படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் டைகர் ஷெராப். இவரும் பாலிவுட்டில் இளம் நடிகராக வலம் வருகிறார். ‛ஹீரோபன்டி' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் ‛பாகி 2, வார், பாகி 3' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் ஆக் ஷன் நாயகனாக வலம் வருகிறார். இவரது ஆக் ஷனுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.
இந்நிலையில் மஹாராஷ்டிராவின் மும்பை நகரில் உள்ள ஜூஹூ பகுதியில் நடிகர் டைகர் ஷெராப் காரில் சென்று கொண்டிருந்தார். 3 பைக்கில் வந்த கும்பல், அவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கார் டிரைவர் உள்பட இருவர் காயம் அடைந்தனர். 12 தனிப்படைகளை அமைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
துணை முதல்வர் நலம் விசாரிப்பு
மஹாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, டைகர் ஷெராபின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வலைதளங்களில் வைரலாகின. அதில் டைகர் ஷெராப் காயங்களுடன் உள்ளார். டைகர் ஷெராப் சட்டை அணியாமல் அமர்ந்து இருக்கிறார். வலது கை, தோள்பட்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் கட்டுகள் போடப்பட்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட பைக்கை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த புகைப்படம், வீடியோக்கள் வைரலாகின.
ஜாக்கி ஷெராப்பிடம் முதல்வர் தேவேந்திர பட்னவிஸிடம் தொலைபேசியில் பேசினார். உடல்நலம் குறித்து விசாரித்தார்.