கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் 'சத்தியவான் சாவித்திரி': நவ.,20ல் ரிலீஸ்
இயக்குனர் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் படம், 'சத்தியவான் சாவித்திரி'. பிரவீன் எஸ் விஜய் இயக்கும் இப்படத்தில் சாருகேஷ், பாலசரவணன், மதுசூதனன், சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, ஏ.வெங்கடேஷ், பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், உமேஷ் குமார் பன்சால் தயாரிக்கின்றனர். மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் இருவரும் வழக்கறிஞர்களாக நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷின் சீனியராக இருக்கும் மிஷ்கின், ஒரு வழக்கில் எதிர்தரப்பாக மாறுவதும், அதன்பின் நடக்கும் சம்பவங்களுமே கதை.
இப்படம் ஜூலை 24ல் ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்து, பின்னர் ஒத்திவைத்தனர். இந்த நிலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து நவம்பர் 20ம் தேதி படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.