தாத்தா பிறந்த நாளில் புதிய படைப்பு அலுவலகத்தை திறந்த அல்லு அர்ஜூன்!
நடிகர் அல்லு அர்ஜூன், ஐகான்ஸா என்ற தனது புதிய படைப்பு அலுவலகத்தை நேற்று திறந்து வைத்துள்ளார். தனது தாத்தாவும், புகழ்பெற்ற நடிகருமான அல்லு ராமலிங்கய்யா அவர்களின் பிறந்தநாளில் இந்த புதிய அலுவலகத்தை திறந்துள்ளார் அல்லு அர்ஜூன்.
ஐகான்ஸா, அல்லு அர்ஜூனின் எனது கலைப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இதை பகிர்ந்து கொண்ட அல்லு அர்ஜூன், இது ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார். சினிமாவை தாண்டிய படைப்பாற்றல், புதிய யோசனைகள் மற்றும் கூட்டணிகளுக்கான ஒரு மையமாக இந்த அலுவலகம் உருவாகியுள்ளது.
அல்லு அர்ஜூன் தனது படைப்புப் பயணத்தில் மற்றொரு உற்சாகமான கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் வேளையில், இந்த புதிய அலுவலகம் மூலமாக அவர் எந்த மாதிரியான வணிகம் அல்லது திரைப்படத்துறை சம்பந்தமான பணிகளை தொடங்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எளிமையான முறையில் நடந்த அல்லு அர்ஜூனின் இந்த அலுவலக திறப்பு விழாவில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.