உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்கமா... நடிப்பா...? இயக்குனர் ஜேசன் சஞ்சய் பதில்!

இயக்கமா... நடிப்பா...? இயக்குனர் ஜேசன் சஞ்சய் பதில்!


லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.

நடிகை பரியா அப்துல்லா கூறுகையில், ரசிகர்களுடன் படம் பார்த்தது நல்ல அனுபவம். உங்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.

இயக்குனர் சஞ்சய் கூறுகையில், ''கடந்த மூன்று வருடங்களாக என்னுடன் பயணம் செய்த லைகா நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். சிக்மா படத்தின் ரிலீஸூக்கு பிறகுதான் நடிப்பா இயக்கமா என்பதை முடிவு செய்வேன். படம் பார்த்த அம்மா, தங்கை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்தினர்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !