மகனின் 'சிக்மா' படம் பார்க்க சென்னை வந்த முதல்வர் விஜய் மனைவி சங்கீதா, மகள் திவ்யா
முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய 'சிக்மா' படம் இன்று (அக்.,2) ரிலீஸ் ஆனது. இதனையடுத்து சென்னை கமலா தியேட்டரில் இன்று காலை தொடங்கிய முதல் காட்சியில் அந்த படத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள், தயாரிப்பாளர் தமிழ் குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இயக்குனர் ஜேசன் சஞ்சய்க்கு மேளதாளம் முழங்க சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் திடீர் சர்பிரைஸ் ஆக ஜேசன் சஞ்சய் தாயார் சங்கீதா, அவரது சகோதரி திவ்யா சாஷா ஆகியோரும் கமலா தியேட்டருக்கு படம் பார்க்க வந்தனர். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் திவ்யா. அவர் போட்டோ வீடியோ கூட வெளியே வராமல் இருந்தது. அதேபோல் சங்கீதாவும் பல மாதங்களாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மகன், அண்ணன் இயக்கிய முதல் படம் என்பதால் இருவரும் தியேட்டருக்கு படம் பார்க்க வந்துள்ளனர். இன்று மதியம் சென்னை பிரசாத் லேபில் படம் குறித்து பட குழுவினருடன் சிக்மா இயக்குனர் ஜேசன் பேச உள்ளார்.