உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'க்ரோர்பதி' நிகழ்ச்சியின் போது கீழே விழுந்ததில் அமிதாப் பச்சனுக்கு காயம்

'க்ரோர்பதி' நிகழ்ச்சியின் போது கீழே விழுந்ததில் அமிதாப் பச்சனுக்கு காயம்


நடிகர் அமிதாப் பச்சன் கடந்த பல வருடங்களாக ஹிந்தியில் 'கோன் பனேகா க்ரோர்பதி' என்கிற ரியாலிட்டி ஷோவை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சியின் பதினெட்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. பொதுவாகவே, இந்த நிகழ்ச்சியை நடத்தும் போது அமிதாப் பச்சன் மேடையின் நடுவில் நின்றபடி, நடந்தபடி பேசிக்கொண்டிருப்பார். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் நாற்காலியில் அமர்ந்தபடியே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

காரணம், அந்த எபிசோட் படப்பிடிப்பின் போது அவர் தடுமாறி விழுந்ததில் தனது முழங்காலில் அடிபட்டதால், எழுந்து நிற்க சற்று சிரமமாக இருப்பதால் தான், அமர்ந்து கொண்டே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாகக் கூறியுள்ளார் அமிதாப் பச்சன். ஆனாலும், காயம் பெரிய அளவில் தீவிரமானது அல்ல, விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !