30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் ஊர்வசி - ஜெகதீஷ்
ADDED : 4 hours ago
மலையாளத் திரை உலகில் 80 மற்றும் 90களில் நடிகர் ஜெகதீஷ் - ஊர்வசி ஜோடி ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலம். குடும்ப கதை அம்சம் கொண்ட படங்களில், குறிப்பாக சீதனம், பாரியா, சிம்மவளவன், மேனன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் இவர்கள் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர். ஆனால், அதற்குப் பிறகு கிட்டத்தட்ட இந்த 30 வருடங்களாக அவர்கள் எந்த ஒரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது 'ரூம் நம்பர் 9' என்கிற படத்தில் மீண்டும் இவர்கள் இணைந்து நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஒருவர் படிக்கட்டில் இறங்கி வருவது போலவும், இன்னொருவர் படிக்கட்டில் ஏறிச் செல்வது போலவும் இடம் பெற்றுள்ள மர்மமான பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெய் மோகன் என்பவர் இயக்குகிறார்.