உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்டரை தாக்கி 5 லட்சம் கேட்டு மிரட்டல் : பிக்பாஸ் பிரபலம் கைது

டாக்டரை தாக்கி 5 லட்சம் கேட்டு மிரட்டல் : பிக்பாஸ் பிரபலம் கைது

குறும்படம் எடுப்பதாக கூறி 5 லட்சம் மோசடி செய்த தமிழ் 'பிக் பாஸ்' பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஒரு டாக்டரை தாக்கி அவரிடமிருந்து 4 லட்சத்தை மிரட்டி பறிக்க முயன்றதாக இன்னொரு பிக்பாஸ் பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் திவ்யா ஷிண்டே. புனேவை சேர்ந்த இவர் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர், இன்புளூயன்சராகவும் இருக்கிறார். இவர் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து புனேயில் உள்ள அரசு டாக்டர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து அவரை கட்டையால் தாக்கி 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவரது வீட்டையும் அடித்து நொறுக்கி சேத்ப்படுத்தி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக டாக்டர் அளித்த புகாரின் பேரில் அவரது வீட்டு சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக திவ்யா ஷிண்டே கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. பிக்பாஸ் பிரபலங்கள் குற்ற வழக்கில் சிக்குவதும், கைது செய்யப்படுவதும் அந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !