உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டோரதி : ஆன்லைன் விமர்சனங்களுக்கு கார்த்திக் சுப்பராஜ் பதில்

டோரதி : ஆன்லைன் விமர்சனங்களுக்கு கார்த்திக் சுப்பராஜ் பதில்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'டோரதி'.

மதுரை மண் சார்ந்த ஒரு கிராமத்து ரவுடியிசக் கதையாக நகரும் படம், பின்னர் திருநங்கைகள் பற்றிய படமாக வேறு தளத்திற்கு மாறிச் செல்கிறது. இப்படம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், குறிப்பாக எக்ஸ் (முன்னர் டிவிட்டர்) தளத்தில் விவாதிக்கப்படுவது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “டிவிட்டர் உலகம்னு இருக்கு இல்லையா... அதுவே சின்ன உலகம்.... அதுல நீங்க சொல்ற மாதிரி சொல்றவங்க அதை விட சின்ன உலகம். ஒரு சினிமாவைப் பார்க்க ரசிகர்கள் ரொம்ப பெருசு. படத்தைப் பத்தி எவ்வளவோ பேர் தியேட்டர்ல நல்லா சொல்றாங்களே, அதைப் பத்தியும் கேளுங்க. யாரோ ஒரு நாலு பேர் டிவீட் பண்றாங்கன்றதையே கேட்டுக்கிட்டு இருக்கீங்க.

ஆன்லைன்ல வெறுப்பா சொல்ற விஷயம் கொஞ்சம் இருக்கு. தியேட்டருக்கு வர்ற ரசிகர்களுக்கு அது பெரிசா தெரியல. ஒவ்வொருத்தரும் படம் பார்க்கணும்னுதான் நான் விருப்பப்படறேன். இந்தப் படத்தைப் பத்தி விவாதம் பண்றதை நான் ஆரோக்கியமா பார்க்கிறேன்.

திருநங்கைகள் பத்தின கதையே வரக்கூடாதுன்னு சொல்றாங்கன்னா, அது யாரோட பிரச்சனை. அவங்களும் வந்து படம் பார்க்கணும். அவங்களும் 'பன்ச்' போடறாங்கன்னு நானும் 'பன்ச்' போட்டன்னா அது போயிட்டே இருக்கும்,” என பதிலளித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !