உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜாவின் இரண்டு படங்கள் இன்று வெளியீடு

இளையராஜாவின் இரண்டு படங்கள் இன்று வெளியீடு

இந்தியத் திரையுலகத்தின் இசை ஆளுமைகளில் முக்கியமானவர் இளையராஜா. தமிழில் மட்டுமல்லாது இந்திய மொழிகள் பலவற்றிலும் அவரது இசை இனிமையாக ஒலித்துள்ளது. கடந்த 50 வருடங்களாக இசை ரசிகர்களை தனது இசையின் மூலம் மகிழ்வித்து வருகிறார்.

அவரது பாடல்கள் இல்லாமல் ஒரு நாளும் கடந்து போனதில்லை. இன்றைய தலைமுறையினர், இன்றைய குழந்தைகள் கூட அவரது இசையைக் கேட்டு ரசித்து வருகிறார்கள். டிவிக்களில் பல இசை நிகழ்ச்சிகளில் இளையராஜா பாடல் இல்லாமல் நிகழ்ச்சியே இல்லை என்றளவிற்கு அவரது இசை நிறைந்திருக்கிறது.

ஒரு கால கட்டத்தில் ஒரே நாளில் அவரது பல படங்கள் வெளியாகி உள்ளன. அந்தப் படங்கள் அனைத்திலும் அவரது பாடல்கள், இசை அப்படங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகவும் அமைந்துள்ளன.

அந்த நாட்களை மீண்டும் நினைத்துப் பார்க்கும் விதத்தில் இன்று இளையராஜா இசையில் இரண்டு படங்கள் வெளியாகின்றன. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடித்துள்ள 'டோரதி', பாலசந்திரன் இயக்கத்தில், கங்கை அமரன், ரோஜா, தர்ஷன் கணேசன் நடித்துள்ள 'லெனின் பாண்டியன்' ஆகிய இரண்டு படங்கள்தான் அவை. இரண்டு படங்களிலும் இளையராஜாவின் இசை படத்திற்கு பக்கபலமாக உள்ளதாக படத்தைப் பார்த்தவர்கள் குறிப்பிடுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !