உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிர்வாகிகள் பதவி நீட்டிப்பு செய்தது எப்படி?: விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்திற்கு கோர்ட் நோட்டீஸ்

நிர்வாகிகள் பதவி நீட்டிப்பு செய்தது எப்படி?: விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்திற்கு கோர்ட் நோட்டீஸ்


தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2022ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் தலைவராக நாசர், பொதுச் செயலராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம், 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது.

இந்நிலையில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருவதாக கூறி, நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து 2024ம் ஆண்டு சங்கத்தின் பொதுகுழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து, சங்கங்களின் பதிவாளர் 2025ம் ஆண்டு அக்டோபர் 14ல் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சங்க உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இதே பிரச்னை தொடர்பாக சிவில் வழக்கு ஒன்றும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !