பிரம்மாண்ட தொடக்கத்திற்கு தயாராகும் நானியின் தி பாரடைஸ்
தெலுங்கில் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி, கயாடு லோஹர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தி பாரடைஸ். நானி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தி பாரடைஸ் படம் சிறப்பு காட்சிகளுடன் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முன்பதிவு சாதனை படைத்து வருகிறது. நானி மற்றும் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது வெளியீட்டுக்கு முந்தைய எண்களிலும் பிரதிபலிக்கிறது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் இப்படம் ரூ.22.69 கோடி வசூல் செய்துள்ளது. இதில் ஆந்திராவில் இருந்து ரூ.8.64 கோடியும், தெலுங்கானாவில் இருந்து ரூ. 14.05 கோடியும் கிடைத்துள்ளது.
இந்த ஆர்வம் தெலுங்கு மாநிலங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. தி பாரடைஸ் படம் உலகளவில் முன்பதிவில் ரூ. 44.09 கோடியைக் கடந்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து ரூ. 29.17 கோடியும், வெளிநாடுகளில் இருந்து ரூ. 14.92 கோடியும் அடங்கும்.
முன்பதிவு தொகையே ரூ. 50 கோடி என்ற இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில், இப்படம் மிகப்பெரிய வரவேற்புடன் முதல் காட்சிக்குத் தயாராகிறது. பிரம்மாண்டமான எண்கள் ஏற்கனவே பதிவாகிவிட்டன. இனி சிறப்பு திரையிடலின் வரவேற்பும், பார்வையாளர்களின் கருத்துமே இப்படத்தின் முதல் நாள் வசூலைத் தீர்மானிக்கும்.