துணிந்து செய்தேன் : ராஷ்மிகா
ADDED : 3 hours ago
ரவீந்திர புல்லே இயக்கத்தில் ராஷ்மிகா கதையின் நாயகியாக நடித்துள்ள ‛மைசா' படம் நவ., 27ல் ரிலீஸாகிறது. இதன் டீசர் வெளியாகி உள்ளது. இதில் பழங்குடியின பெண்ணாக களமிறங்கி உள்ளார் ராஷ்மிகா. பைக் சேசிங், அண்டர் வாட்டர், ரிஸ்க்கான சண்டைக் காட்சிகள் என ஆக் ஷனிலும் அசத்தி உள்ளார்.
ராஷ்மிகா கூறுகையில், ‛‛படத்தில் நீருக்கடியில் வரும் ஒரு பிரமாண்ட சண்டைக் காட்சிக்காக 90 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து குதிக்கணும். நான் பயந்துவிட்டேன். பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் கடினமாக இருந்தது. இருப்பினும் அந்தக்காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக துணிந்து செய்தேன்'' என்றார்.