உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஒரு பாட்டுக்கு ஆடி அறிமுகமான ஹேமமாலினி

பிளாஷ்பேக்: ஒரு பாட்டுக்கு ஆடி அறிமுகமான ஹேமமாலினி


பிற்காலத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஹேமமாலினி. தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இங்கிருந்து புறக்கணிக்கப்பட்டு பின்னர் பாலிவுட்டிற்கு சென்றவர். சென்னையில் நடனம் கற்ற ஹேமமாலினி சினிமாவில் துணை நடன கலைஞராக பல படங்களில் பின்னணியில் ஆடியுள்ளார். அவர் முதன் முதலாக முகம் தெரியும் அளவிற்கு முதன்மை நடன கலைஞராக பணியாற்றியது 'இது சத்தியம்' என்ற படத்தில்தான்.

இந்த படத்தில் அவர் 'சிங்கார தேருக்கு சேலைகட்டி' என்ற பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு ஆடினார். கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்பில் 40 நடன கலைஞர்களுடன் ஆடினார். என்றாலும் இவர்தான் பிரதான நடன மங்கையாக இருந்தார்.

இந்த படத்தை சரவணா பிக்சர்ஸ் சார்பில் வேலுமணி தயாரித்தார். சங்கர் இயக்கினார். அசோகன், டி.எஸ்.தேவராஜ், டி.எஸ்.பாலைய்யா, நாகய்கா, கண்ணாம்பா உள்ளிட்ட பலர் நடித்தனர். விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசை அமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !