உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் - தமிழரசன் பச்சமுத்து - சாய் அபயங்கர், புதிய கூட்டணி ?

தனுஷ் - தமிழரசன் பச்சமுத்து - சாய் அபயங்கர், புதிய கூட்டணி ?

தனுஷ் தற்போது நடித்து வரும் 'ஓம்' படம் அக்டோபர் 16ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு அவர் 'லப்பர் பந்து' படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் சம்பந்தமாக பஞ்சாயத்து ஒன்று திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கிறது. இருந்தாலும் படத்தின் வேலைகளை படக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர், தமிழரசன் பச்சமுத்துவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, 'கேக்குறாங்க சொல்லுங்க பிரதர்,” என்று பதிவிட்டுள்ளார். அதற்கு தமிழரசன், “பொட்டு வச்ச தங்கக்குடம்' பாட்டுக்கு 'அன்பிளக்ட் வர்ஷன்' பண்ணி தா… நீதான்னு சொல்லிடறேன்,” என்று பதிலளித்துள்ளார்.

தனுஷ், தமிழரசன் பச்சமுத்து இணையும் புதிய படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து அக்டோபர் 16ம் தேதி வெளியாக உள்ள படத்திற்கும் சாய் அபயங்கர் தான் இசை. மீண்டும் தனுஷ், சாய் அபயங்கர் கூட்டணி தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ள படத்தில் இணையப் போகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !