உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026 - இந்தியப் படங்களின் வசூலில் 3ம் இடத்தைப் பிடிக்கும் 'ஹனுமான் அன்ஷ்'

2026 - இந்தியப் படங்களின் வசூலில் 3ம் இடத்தைப் பிடிக்கும் 'ஹனுமான் அன்ஷ்'

இந்தியத் திரையுலகத்தில் ஆச்சரியப்படும் வசூலை சில சிறிய படங்கள் கடந்த சில வருடங்களாகத் தந்து வருகின்றன. அந்த விதத்தில் கடந்த மாதம் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான ஹிந்திப் படமான 'ஹனுமான் அன்ஷ்' படம் 300 கோடி வசூலைக் கடந்து சில முக்கிய படங்களின் வசூலை முறியடித்துள்ளது.

நீம் கரோலி பாபாவின் இளவயது வாழ்க்கையை மையமாகக் கொண்ட இப்படத்தை விஷால் சதுர்வேதி இயக்க ஷோபிநவ் சத்யா, சந்தன் ஆனந்த், பூர்ணிமா திவாரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தற்போது 350 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் மொத்த பட்ஜெட்டே வெறும் 2 கோடி தான் என்கிறார்கள்.

இந்த வருடத்தில் இதுவரையில் வெளிவந்த படங்களில் 'துரந்தர் 2' படம் 1800 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. 460 கோடி வசூலுடன் 'பார்டர் 2' படம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தை 'ஹனுமான் ஹன்ஷ்' படம் பிடிக்கிறது.

அதிக செலவுடன் பிரம்மாண்டமாகத் தயாரான, முன்னணி நடிகர்கள் நடித்த “டாக்சிக், பெத்தி, ஜனநாயகன், பெத்லகேம் குடும்ப யூனிட், கருப்பு, மன ஷங்கர வரபிரசாத்” ஆகிய படங்களின் வசூலை இந்தப் படம் முறியடித்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !