உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026 வசூலில் டாப் 5ல் இடம் பிடித்த 'மண்டாடி'

2026 வசூலில் டாப் 5ல் இடம் பிடித்த 'மண்டாடி'

2026ம் ஆண்டில் இதுவரையில் வெளியான 160க்கும் மேற்பட்ட படங்களில் 6 படங்கள்தான் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளன. அவற்றில் லாபத்தைப் பெற்றுத் தந்த படங்கள் ஒரு சில படங்கள்தான்.

300 கோடி வசூலைக் கடந்த படங்களாக அதிகாரப்பூர்வ பட்டியலில் 'கருப்பு' படம் இருக்கிறது. அதிகாரப்பூர்வமற்ற 300 கோடி வசூலில் 'ஜனநாயகன்' படம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதற்கடுத்து 240 கோடி வசூலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் 3வது இடத்திலும், 100 கோடி வசூலைப் பெற்று 'டிசி' படம் 4வது இடத்திலும் உள்ளது. இதற்கடுத்து 5வது படமாக 'மண்டாடி' படம் டாப் 5ல் இடம் பிடித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ‛பராசக்தி' படமும் ரூ.100 கோடி வசூலித்ததாக அறிவித்தனர்.

கதையின் நாயகனாக தனித்த ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறார் சூரி. தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக ஹீரோக்களாக வலம் வந்த சிலரது படங்கள் கூட இந்த ஆண்டில் தோல்வி அடைந்த நிலையில் சூரியின் இந்த வெற்றி திரையுலகினரால் அதிகம் கவனிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியை அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் திரையுலக மூத்தவர்கள் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !