உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஜனவரி 12 விடுதலை' படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கிர்த்தி ஷெட்டி

‛ஜனவரி 12 விடுதலை' படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கிர்த்தி ஷெட்டி

தமிழில் கடந்த ஏப்ரல் மாதம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. கிர்த்தி ஷெட்டி நாயகியான நடித்திருந்தார். அதையடுத்து தற்போது தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகி வரும், ‛ஜனவரி 12 விடுதலை' என்ற படத்தில் நடிக்கிறார்.

செப்டம்பர் 21ம் தேதியான இன்று தனது 23வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் கிர்த்தி ஷெட்டி. இதையொட்டி படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் மற்றும் குழுவினரின் முன்னிலையில் கேக் வெட்டி அவரது பிறந்தநாளைக் கொண்டாடினர். மேலும், இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு சிறப்பு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

திறமை, அழகு மற்றும் ஆற்றலின் உருவமான கிர்த்தி ஷெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த சங்கராந்திக்கு பெரிய திரையில் வெளியாகவுள்ள ஜனவரி 12 விடுதலை படத்தில் அவரது அசத்தலான நடிப்பை ஒரு புதிய பரிமாணத்தில் காணத் தயாராகுங்கள் என்று படக்குழு பதிவிட்டுள்ளது.

இப்படத்தில் கிர்த்தி ஷெட்டி, நந்தமுரி கல்யாண் ராமுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் வெங்கடேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !