வாசகர்கள் கருத்துகள் (1)
படம் பெயர் என்ன?.. சித்தூர் ராணி பத்மினி...
ராஜஸ்தானை சேர்ந்த சித்தூர் ராணி பத்மினி கதை இந்தியா முழுக்க அறியப்பட்ட கதைதான். ஆனால் அந்த கதை முதன் முதலில் திரைப்படமானது தமிழில்தான். உமா பிக்சர்ஸின் ஆர்.எம்.ராமநாதன் இந்த கதையை கேட்டு அதை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்தார். படத்தை நாராயண மூர்த்தி இயக்கினார். கதை, திரைக்கதையை ஸ்ரீதரும் இளங்கோவனும் எழுதினர்.
சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எம்.என்.நம்பியார், டி.எஸ். பாலையா என அந்த காலகட்டத்தில் முன்னணியில் இருந்த நடிகர்கள் பலரும் படத்தில் நடித்தனர்.
சித்தூர் ராணி பத்மினி மீது தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி கொண்டிருந்த ஆசையே இந்தப் படத்தின் கதை. பத்மினியின் கணவன் ராணா (சிவாஜி) மனைவி மீது தீராத காதல் கொண்டவர், மாவீரன். ஒரு கட்டத்தில் ராணியை தான் பார்க்காவிட்டால், ராஜ்ஜியத்தையே அழித்துவிடப் போவதாக அலாவுதீன் கில்ஜி மிரட்ட, ஒரு ஏற்பாட்டுக்கு வருகிறார் ராணா. அதாவது ராணியின் பிம்பம் தண்ணீரில் பிரதிபலிக்கும்: அந்த பிம்பத்தை கண்ணாடியில் பிரதிபலிக்கச் செய்து கில்ஜி பார்த்துக்கொள்ளலாம். என்கிறார்.
அந்த நேரத்தில் தன் மனைவியை அடைய நினைக்கும் கில்ஜியை கொல்ல ராணா திட்டமிடுகிறார். அவரது திட்டம் தோல்வி அடைகிறது. ராணா கைது செய்யப்படுகிறார். கில்ஜியின் பெரும்படை சித்தூர் வருகிறது. போரில் ராணா கொல்லப்பட, கில்ஜி நாட்டை கைப்பற்றினால் தன்னை ஆட்கொள்வான் என்பதால் ராணியும் உயிரை மாய்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இதே கதைதான் பிற்காலத்தில் ஹிந்தியில் 'பத்மாவதி' என்ற பெயரில் தயாராகி பெரும் சர்ச்சையை சந்தித்தது. தமிழில் சித்தூர் ராணி எந்த சர்ச்சையையும் சந்திக்கவில்லை. ஆனால் படம் தோல்வியை தழுவியது.
படம் பெயர் என்ன?.. சித்தூர் ராணி பத்மினி...