'டாக்சிக்' பின்னடைவை உடைக்குமா 'தி பாரடைஸ்' ?
2026ம் ஆண்டில் இந்தியத் திரையுலகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா படங்களில் ஒன்று கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தயாரான 'டாக்சிக்'. 500 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் தயாரானதாக சொல்லப்பட்ட இப்படத்தின் முதல் நாள் வசூலை மட்டும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன்பின் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 200 கோடியையாவது படம் கடந்ததா என்பதும் தெரியவில்லை. வெளியான சில நாட்களிலேயே கடும் பின்னடைவை சந்தித்தது படம்.
அப்படத்திற்கு அடுத்து பான் இந்தியா படமாக இந்த வாரம் வெளிவர உள்ள படம் 'தி பாரடைஸ்'. இப்படத்தைத் தெலுங்குப் படம் என்றுதான் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். மற்ற மொழிகளில் வெளியானாலும் பான் இந்தியா படம் என்று சொல்வதில் தனக்கு விருப்பமில்லை என்றார் படத்தின் நாயகன் நானி. ஆனாலும், பான் இந்தியா படம் என்றேதான் பலரும் குறிப்பிடுகிறார்கள்.
'டாக்சிக்' படம் அதிரடி ஆக்ஷன் படமாக வன்முறைக் காட்சிகளுடன் 'ஏ' சான்றிதழ் பெற்ற படமாக வெளிவந்து ஏமாற்றத்தைத் தந்தது. 'தி பாரடைஸ்' படமும் வன்முறைக் காட்சிகளுடன் 'ஏ' சான்று பெற்ற படமாகவே வெளியாக உள்ளது.
'டாக்சிக்' தந்த ஏமாற்றத்தை 'தி பாரடைஸ்' தராது என தெலுங்குத் திரையுலகத்தினர் நம்புகிறார்கள். சில நாட்களில் அது தெரிந்துவிடும்.