உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசியலுக்கு வருகிறேனா? ரவிமோகன் சொன்ன விளக்கம்

அரசியலுக்கு வருகிறேனா? ரவிமோகன் சொன்ன விளக்கம்

கடந்த சில மாதங்களாக சில முன்னணி நடிகர்கள் தங்கள் ரசிகர்களை சந்தித்து, அவர்களுக்கு விருந்தளித்து, அவர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார்கள். தங்கள் படம் ஓட காரணமானவர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த நிகழ்வு என கூறப்படுகிறது. நடிகர்கள் தனுஷ், விஜய்சேதுபதி, கார்த்தி, சூர்யா போன்றவர்கள் இப்படிப்பட்ட விருந்து கொடுத்தனர். இப்போது ரவிமோகன் முறை.

சென்னையில் இன்று ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களை அவர் சந்தித்து பேசினார். அப்போது ஒரு ரசிகர் மன்ற நிர்வாகி 'அண்ணா குரல் கொடுங்கள் கொடியை கொடுங்கள், கோட்டையை பிடிக்கலாம். நாங்கள் அலை அலையாய் வருகிறோம்' ' என ஆவேசப்பட்டார்.

அப்போது பேசிய ரவிமோகன் ''ரசிகர்களை நடிகர்கள் சந்தித்தால் அதை அரசியலாக பார்க்கிறார்கள். நான் இப்போது சினிமாவில் மட்டுமே இருக்கிறேன். நல்லது செய்ய பதவி தேவையில்லை. தேவைப்பட்டால் அதை எடுத்து செய்யலாம். தோல்விகள்தான் என் வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொடுத்தது. நான் எப்போதும் ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டேன்'' என்றார்.

ரவிமோகன் நடித்த கராத்தே பாபு விரைவில் வர உள்ளது. அவர் இயக்கிய ‛ஆன் ஆர்டினரிமேன்' இந்த ஆண்டு ரிலீஸ் ஆக வாய்ப்பு, செப்டம்பர் 10ம் தேதி அவருக்கு 46வது பிறந்தநாள். இதை முன்னிட்டு அவர் ரசிகர்களை சந்தித்து, கேக் வெட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !