தியேட்டரில் கிளாடியேட்டர்ஸ் டிரைலர்
ADDED : 7 hours ago
நடிகர் அஜித் குமார் கடந்த சில ஆண்டுகளாக கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக கடந்தாண்டு ஓராண்டாக அவர் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டார். பல போட்டிகளில் பரிசுளும் பெற்றார். இவரது கார் ரேஸ் பின்னணியை வைத்து ‛கிளாடியேட்டர்ஸ்' என்ற ஆவணப்படம் உருவாகி உள்ளது. இதை ஏஎல் விஜய் இயக்கி உள்ளார். பல்வேறு திரை நட்சத்திரங்களும் இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். முன்னதாக நாளை இதன் டிரைலரை மாலை 6:40 மணியளவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சில குறிப்பிட்ட தியேட்டர்களில் வெளியிடுவதாக அறிவித்து தியேட்டர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.