உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே வாரத்தில் போட்டி போடும் துல்கர் சல்மான், நிவின் பாலி

ஒரே வாரத்தில் போட்டி போடும் துல்கர் சல்மான், நிவின் பாலி

மலையாளத் திரையுலகத்தின் இளம் நடிகர்களாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் துல்கர் சல்மான், நிவின் பாலி. இந்த வாரம் இருவரும் கேரளாவைத் தவிர மற்ற மாநிலங்களில் அவர்களது புதிய படங்களின் மூலம் போட்டியில் குதித்துள்ளார்கள்.

நிவின் பாலி, மமிதா பைஜு நடித்து ஆகஸ்ட் 21ம் தேதி வெளியான மலையாளப் படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'. அப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்தைத் தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்து நேற்று வெளியிட்டுள்ளார்கள். படத்திற்கு இரண்டு மொழிகளிலும் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

துல்கல் சல்மான், கயாடு லோகர் நடித்துள்ள 'ஐ ஆம் கேம்' படம் செப்டம்பர் 3ல் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது. துல்கர் சல்மானுக்கு ஏற்கெனவே, தமிழ், தெலுங்கில் சில வெற்றிப் படங்கள் கணக்கில் உள்ளது.

நிவின் பாலியின் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம் இரண்டு வாரங்களாகியும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. 'ஐ ஆம் கேம்' படத்திற்கான விமர்சனங்கள் இரு விதமாக உள்ளது.

ஒரிஜனல் மலையாளத்தைத் தவிர டப்பிங் ஆகி வெளியாகி உள்ள மாநிலங்களில் ஒரே வாரத்தில் வெளியாகி உள்ள இந்த இரண்டு படங்களுக்கான வசூல் எப்படி இருக்கப் போகிறது என்பதை திங்கள்தான் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !