உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிவி நிகழ்ச்சிக்கு சல்மான் கான் பெறும் அதிக சம்பளம்

டிவி நிகழ்ச்சிக்கு சல்மான் கான் பெறும் அதிக சம்பளம்

இந்திய டிவி உலகில் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு அதிக சம்பளம் பெறும் நடிகராக சல்மான் கான் இருக்கப் போகிறார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஹிந்தி டிவி சேனல்களில் கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'பிக் பாஸ்'.

நாளை செப்டம்பர் 6ம் தேதி முதல் அதன் 20வது சீசன் ஆரம்பமாக உள்ளது. இதற்காக அதன் தொகுப்பாளரான நடிகர் சல்மான் கான் பெறப் போகும் சம்பளம் சுமார் 150 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. 2010ல் ஒளிபரப்பான சீசன் 4 முதல் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் சல்மான். அந்த சீசனுக்கு அவருக்கு ஒரு எபிசோடுக்கு சுமார் 2 கோடி வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

அதற்கடுத்த ஒவ்வொரு சீசனிலும் அவரது சம்பளம் உயர்த்தப்பட்டு இப்போது இத்தனை கோடிக்கு வந்து நிற்கிறது.

தமிழில் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய போது அவரும் கணிசமான தொகையை சம்பளமாகப் பெற்றார். அவர் 7 சீசன்களை மட்டும் தொகுத்து வழங்கினார். கடந்த இரண்டு சீசன்களாக நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதன் 10வது சீசன் நாளை செப்டம்பர் 6ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த சீசனுக்கும் விஜய் சேதுபதிதான் தொகுப்பாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !