உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டிசி' : 15 கோடிக்கு மேல் வசூல்

'டிசி' : 15 கோடிக்கு மேல் வசூல்


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'டிசி' படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தில் சஞ்சனா, வாமிகா கபி கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

படம் வெளியான மூன்று நாட்களில் இப்படம் 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஏ' சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும் இளம் ரசிகர்கள் இப்படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு முக்கிய காரணமாக அனிருத்தின் பின்னணி இசை அமைந்துள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கும் படம் என்றாலே அதில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் அதிகம் இருக்கும் என்பது தெரிந்த ஒன்றுதான். இதற்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளிவந்த 'ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர்' ஆகிய படங்களும் இப்படியான அதிரடியான ரத்தம் தெறிக்கும் ரவுடியிசப் பின்னணி கதை கொண்ட படங்களாகவே இருந்தன. அது போலவே இந்தப் படமும் உள்ளது.

இருப்பினும் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகம் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இன்றிலிருந்து ஆகும் வசூல் தான் படத்தின் வெற்றி என்ன என்பதைத் தீர்மானிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !