உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் 'வேள்பாரி' கனவு: அஜித், ஷங்கர் கூட்டணி உருவாகுமா?

மீண்டும் 'வேள்பாரி' கனவு: அஜித், ஷங்கர் கூட்டணி உருவாகுமா?


'இந்தியன் 2' பட கொடுத்த அடியால் இன்னும் மீளாமல் தவிக்கிறார் ஷங்கர். அடுத்து பல படங்களை இயக்க நினைத்தார். பல ஹீரோக்களை அணுகிறார். ஆனால் செட்டாகவில்லை. கடைசியாக, அவர் ரஜின்காந்த படத்தில் வில்லனாக நடிக்கப்போகிறார் என்று கூட பேசப்பட்டது. இப்போது எப்படியாவது 'வேள்பாரி' கதையை எடுத்த தீர வேண்டும் என முடிவு செய்து இருக்கிறாராம்.

அந்த கதையில் நடிக்க சூர்யா, சில இந்தி ஹீரோ பேசப்பட்ட நிலையில், இப்போது அஜித் பக்கம் வந்து இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த முறை குறி தப்பாது என்கிறார்கள். இப்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'டேர் டெவில்' படத்தில் நடிக்கிறார் அஜித். அதில் மோகன்லால், வெங்கடேஷ் நடிக்கப்போகிறார்களாம். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கி, அடுத்த ஆண்டு வெளியாக வாய்ப்பு.

அடுத்து 'மங்காத்தா 2', சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்த காலகட்டத்தில் எப்படி ஷங்கருக்கு கால்ஷீட் கொடுப்பார்? அவர் ஒரு படத்தை ஒரு ஆண்டுக்கு மேல் எடுப்பாரே என கேள்வி எழுந்துள்ளது. ஷங்கர், அஜித் இணைந்தால் அந்த படத்தின் பட்ஜெட் 500 கோடியை தாண்டும். அஜித் சம்பளம் 180 கோடி, ஷங்கருக்கு பெரிய சம்பளம் என்றால், அந்த படத்தை யார் தயாரிப்பார்கள்? ஒருவேளை அஜித்தே தயாரிப்பாரா என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. எதற்கும் இப்போதைக்கு பதில் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !