உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கட்டா குஸ்தி 3 வருமா? வராதா?

கட்டா குஸ்தி 3 வருமா? வராதா?

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி நடித்த கட்டா குஸ்தி படம் 2022ம் ம் ஆண்டு வெளியானது. 30 கோடி வசூலை அள்ளியது. கட்டா குஸ்தி 2 கடந்த ஜூலையில் வெளியாகி, 55க்கும் அதிகமான வசூலை அள்ளியது. இந்நிலையில், கட்டா குஸ்தி 3 உருவாக உள்ளது. இதை இயக்குனர் செல்லாவும் உறுதிப்படுத்தி உள்ளார். எப்போது தயாராகும், எப்போது வெளியாகும், யார் தயாரிக்கப் போகிறார்கள் என்பது முடிவாகவில்லை.

முதல் இரண்டு பாகங்களும் நல்ல லாபத்தை கொடுத்து இருப்பதால், 2வது பாகத்தை தயாரித்த ஐசரி கணேஷ் 3வது பாகத்தை தயாரிக்க வாய்ப்பு. முதல் இரண்டு பாகங்களில் நடித்த முக்கியமானவர்கள் 3வது பாகத்திலும் இருப்பார்கள், புதிதாக சிலர் வருவார்கள். கட்டா குஸ்தி 2 வெற்றி காரணமாக இயக்குனர் செல்லா அய்யாவுக்கு விஷ்ணு விஷால் கார் வாங்கிக் கொடுத்தார். அவருக்கு தயாரிப்பாளர் ஐசரி சொகுசு கார் வாங்கிக் கொடுத்தார். கட்டா குஸ்தி 3 உருவானால், தமிழில் சிங்கம், முனி, அரண்மனை பாகங்களை தொடர்ந்து இந்த படமும் 3வது பாகம் வந்த படம் என்ற பெருமையை பெரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !