உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாற்றம் வந்தது அக்கறையால் அல்ல, பயத்தால் ! பார்வதி ஓப்பன் டாக்

மாற்றம் வந்தது அக்கறையால் அல்ல, பயத்தால் ! பார்வதி ஓப்பன் டாக்


மலையாள நடிகை பார்வதி, மனதில் பட்ட கருத்துக்களை துணிச்சலாகத் வெளிப்படையாக பேசக்கூடியவர். அதனாலேயே அவர் பல சமயங்களில் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். குறிப்பாக, மலையாள சினிமாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு சினிமா பெண்கள் நல அமைப்பு மூலமாக எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வருடம் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை காரணமாக மலையாள சினிமாவில் கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும், அது குறித்து பார்வதியின் கருத்து வேறாக இருக்கிறது.

“கடந்த எட்டு, ஒன்பது ஆண்டுகளில் மலையாள சினிமாவில் ஓரளவு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், அவை உண்மையான அக்கறையால் வரவில்லை.. மாறாக பொதுமக்களின் கண்டனம், மீடியா விமர்சனங்கள் ஆகியவற்றுக்குப் பயந்துதான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்னும் 'ஹீரோ வழிபாடு'தான் இங்கே நிலவுகிறது. சூப்பர் ஸ்டார்கள் கடவுளாகப் பார்க்கப்படுவதால், அவர்களை யாரும் கேள்வி கேட்க முடிவதில்லை. இது புதுமுகங்கள் மீது அதிகாரம் மிக்க நபர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த வழி வைக்கிறது. இந்த சீர்திருத்தங்களின் வேகம் குறைவாக இருப்பது ஏமாற்றம் அளித்தாலும் கூட, எங்களது பெண்கள் நல அமைப்பு இதற்கான போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை” என்று உறுதிபடக் கூறியுள்ளார் பார்வதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !