'கட்டா குஸ்தி 2' : 3 நாள் வசூல் என்ன தெரியுமா?
செல்லா அய்யாவு இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'கட்டா குஸ்தி 2'. கலகலப்பான குடும்பப் படமாக அமைந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தியேட்டர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படம் வெளியான மூன்று நாட்களில் 22 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கான ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றின் மூலம் இப்படத்தின் முதலீடு பெருமளவில் வசூலிக்கப்பட்டுவிட்டது. தியேட்டர் ஓட்டம் என்பதெல்லாம் படத்திற்கு கூடுதல் லாபம்தானாம்.
படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை யூகித்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான விஷ்ணு விஷால் ஏற்கெனவே இயக்குனர் செல்லா அய்யாவுக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார். இந்த வாரமும் படம் தாக்குப் பிடித்துவிட்டால் இந்த வருடத்தின் லாபகரமான படங்களின் வரிசையில் சேர்ந்துவிடும் என்கிறார்கள்.