உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இறுதி ஊர்வலத்திற்கான பாடல்; இப்போதே ரெடி செய்த ஜாக்கிசான்

இறுதி ஊர்வலத்திற்கான பாடல்; இப்போதே ரெடி செய்த ஜாக்கிசான்


உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான். உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர். காமெடி கலந்த அவரது சண்டை காட்சிகளுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது 71 வயதான ஜாக்கிசான், இன்றளவும் ஆக்சன் படங்களில் நடித்து அசத்துகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு, ஜாக்கிசான் தான் சம்பாதித்த ரூ.3400 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை தனது மகனுக்கு கூட எழுதி வைக்காமல், ஏழை மக்களுக்கு உதவும் வகையில் தனது அறக்கட்டளைக்கு வழங்கி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இந்த நிலையில், தான் உயிருடன் இருக்கும்போதே தன்னுடைய இறப்பிற்கு பிறகு, இறுதி ஊர்வலத்திற்கு இசைக்க வேண்டிய பாடலை இப்போதே ஜாக்கிசான் உருவாக்கியுள்ளார். தான் உயிரிழந்த பிறகு மட்டுமே அந்தப் பாடலை வெளியிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தனக்கான இறுதி அஞ்சலி பாடலை பதிவு செய்திருக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !