உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: டைட்டிலால் தோல்வி அடைந்த எம்ஜிஆர் படம்

பிளாஷ்பேக்: டைட்டிலால் தோல்வி அடைந்த எம்ஜிஆர் படம்


மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த சில தோல்வி படங்கள் உண்டு, படுதோல்வி அடைந்த அரிதான சில படங்களும் உண்டு. அதில் முதலிடம் வகிப்பது 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.

முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை எழுதிய கதை அதே பெயரில் தயாரானது. ராம அரங்கண்ணல் திரைக்கதை, வசனம் எழுதினார். அப்போது பிரபல ஒளிப்பதிவாளராக இருந்த ஆர்.ஆர்.சந்திரன் இயக்கினார். அண்ணாதுரையின் மேல் இருந்த அன்பின் காரணமாக எந்த கேள்வியும் கேட்காமல் இந்தப் படத்தில் நடித்தார் எம்ஜிஆர்.

இதில் எம்ஜி.சக்கரபாணி, தங்கவேலு, கண்ணாம்பா, ஜமுனா, ராஜசுலோச்சனா, காகா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஜாதி பிரச்சினையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம். சிறந்த ஒளிப்பதிவிற்காக அப்போது பாராட்டப்பட்ட படம். என்றாலும் தவறான இயக்கத்தாலும், மக்களால் ஏற்க முடியாத டைட்டிலாலும் படம் தோல்வி அடைந்தது.

பிற்காலததில இந்த படத்தின் தோல்வி குறித்து எம்ஜிஆர் பேசும்போது “ஒரு படத்திற்கு தலைப்பு எவ்வளவு முக்கியம் என்றதை எனக்கு உணர்த்திய படம். இந்த படத்திற்கு பிறகு தலைப்பில் கூடுதல் கவனம் செலுத்தினேன். அத்தோடு படத்தின் இயக்குனர் ஒளிப்பதிவாளர் என்பதால் அதில் மட்டுமே அவரது கவனம் இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !