ஜன., 29ல் திரைக்கு வரும் மணிரத்னத்தின் ‛இஞ்சி வெல்லம்'
ADDED : 1 hours ago
விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள புதிய படம் இஞ்சி வெல்லம். ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இந்திய டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இது ஒரு காதல் திரைப்படமாகும். கோல்கட்டாவை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. பொதுவாக மணிரத்னம் படங்கள் நீண்டநாட்கள் நடைபெறும். ஆனால் இதன் படப்பிடிப்பை மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்திலேயே எடுத்து முடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படம் அடுத்தாண்டு, துவக்கத்தில் அதாவது பொங்கல் பண்டிகை எல்லாம் முடிந்த பிறகு ஜன., 29ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.