உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரள ஐபிஎஸ் அதிகாரியின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்ட சாய் பல்லவியின் ஓம் கதாபாத்திர லுக்

கேரள ஐபிஎஸ் அதிகாரியின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்ட சாய் பல்லவியின் ஓம் கதாபாத்திர லுக்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது ஓம் சாப்டர் 1 படத்தை இயக்கியுள்ளார். தனுஷ், மம்முட்டி இருவரும் நடித்துள்ள இந்த படத்திலும் சாய்பல்லவி தான் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் ஏஎஸ்பி நித்யா ரெட்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரத்தை உருவாக்குவதற்காக தனக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது கேரளாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான மெரின் ஜோசப் என்பவர் தான் என கூறியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

இது குறித்து அவர் கூறும்போது, “ஓம் படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரம் நேரிடையாக மெரின் ஜோசப்பின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றாலும் சாய் பல்லவியின் தோற்றத்திற்கு மெரின ஜோசப் தான் முன்மாதிரியாக இருந்தார் அவரைப் போலவே சாய் பல்லவியும் இப்படத்தில் பாப் ஹேர் கட் ஸ்டைலில் தோன்றுகிறார்” எனக் கூறியுள்ளார். அது மட்டுமல்ல இந்த படத்தில் தன் கதாபாத்திரத்திற்கு தயாராகும் விதமாக சில நாட்கள் அந்த ஐபிஎஸ் அதிகாரி மெரின் ஜோசப் உடன் தனது நேரத்தை சாய் பல்லவி செலவிட்டு அவரிடம் இருந்து பல விஷயங்களையும் கற்றுக் கொண்டாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !