உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனி ஹீரோவாக ஹிட் கொடுக்க தயாராகும் நஸ்லேன் : புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தனி ஹீரோவாக ஹிட் கொடுக்க தயாராகும் நஸ்லேன் : புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சமீபத்தில் சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான சீன் திரைப்படம் ரசிகர்களிடம் டீசன்டான வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் வில்லன் கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் மலையாள இளம் நடிகரான நஸ்லேன் நடித்தார். இதற்கு முன்னதாக மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிகளை பெற்று கோடிகளை குவித்த பிரேமலு மற்றும் லோகா சாப்டர் 1 சந்திரா ஆகிய படங்களிலும் இவர்தான் கதாநாயகன் என்றாலும் அந்த படங்களின் வெற்றி மமிதா பைஜூ, கல்யாணி பிரியதர்ஷின் என ஹீரோயின்களுக்கு தான் மிகப்பெரிய அளவில் பயன்பட்டது.

அதன் பிறகு ஆலப்புழா ஜிம்கானா என்கிற படத்தில் நடித்தார் நஸ்லேன், அதுவும் வெற்றி படமே. தற்போது சீன் படத்தில் நடித்துள்ளார். இப்படி வெற்றி படங்களில் எல்லாம் இவர் இடம் பிடித்து வருகிறார் என்றாலும் தனி ஹீரோவாக வெற்றி கொடுக்க வேண்டும் என்பதே இவரது மிக பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ் புகழ் இயக்குனர் மது சி நாராயணன் இயக்கியுள்ள புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் நஸ்லேன். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

சீன் படத்தில் நஸ்லேனுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு மது சி. ராயணன் வெளியிட்டுள்ள பாராட்டு பதிவில், “ஓ ஜி வில்லன் இப்போது எங்கள் கியூட் ஹீரோ. எங்கள் படத்தின் சூட்டிங் முடிந்து விட்டது. விரைவில் திரையரங்குகளில் பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.

கும்பலாகி நைஸ் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து இவர் படம் இயக்குவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நிச்சயம் நஸ்லேனுக்கு ஒரு கதாநாயகனாக இந்த படம் திருப்புமுனையை தரும் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !