உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த வாரம் சில படங்கள் மட்டுமே ரிலீஸ்….

இந்த வாரம் சில படங்கள் மட்டுமே ரிலீஸ்….


கோடை விடுமுறையும், ஐபிஎல் போட்டிகளும் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. இந்த வருட கோடை விடுமுறையை சூர்யா நடித்து வெளிவந்த 'கருப்பு' படம் மட்டுமே சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. அப்படம் 300 கோடி வசூலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

ஜுன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்துவிடுவதால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவது குறைந்துவிடும். அதனால், மே மாதத்தின் கடைசி வாரமான இந்த வாரத்தில் சில படங்களை வெளியிட உள்ளார்கள்.

அர்ஜுன் நடித்துள்ள 'பிளாஸ்ட்' படம் மே 28ம் தேதியும், சிறிய பட்ஜெட் படமான 'ஈகோ ராமன்' மே 29ம் தேதியும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை தவிர கடைசி நேரத்தில் சில படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்படலாம். 28ம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்ட 'பரிமளா அண்ட் கோ' படம் தள்ளி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் 'பானி பூரி பிரேம், மதர்' ஆகிய இரண்டு சிறிய பட்ஜெட் படங்கள் மட்டும் வெளியாகின. அதே சமயம் ஜுன் மாதத்தில் வெளியாக உள்ள சில படங்களின் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ஜுன் இரண்டாம் வாரத்திலிருந்து வழக்கம் போல வாரத்திற்கு ஐந்தாறு படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !