உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிக்கெட் விலை அதிகரிக்கணும் : விஜய்சேதுபதிக்கு கண்டனம்

டிக்கெட் விலை அதிகரிக்கணும் : விஜய்சேதுபதிக்கு கண்டனம்

சமீபத்தில் நடந்த பரிமளா அண்ட் கோ பட விழாவில் சினிமா தியேட்டரில் டிக்கெட் விலை அதிகரித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை அதிகரிக்கணும். அதற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார் விஜய்சேதுபதி.

சமீபத்தில் முதல்வரை சந்தித்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள சங்கமும் தமிழகத்தில் சினிமா தியேட்டர்களில் அதிகப்பட்ச கட்டணம் ரூ 450, ரூ 300 ஆக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சினிமா தியேட்டர் நிலவரம் மோசம், ஆண்டுக்கு 10 சதவீத படங்கள் கூட ஓடுவதில்லை. இதற்கு டிக்கெட் விலை, கேண்டீன், பார்க்கிங் விலையும் ஒரு காரணம். படம் பார்ப்பது செலவு மிக்கதாக ஆகிவிட்டது. ஆகவே, சாதாரண தியேட்டர்களில் டிக்கெட் விலை 100 என்ற அளவில் இருக்க வேண்டும் என்று பல தரப்பினர் விரும்புகிறார்கள். இப்போது அதிகபட்சமாக 200வரை டிக்கெட் விலை வருகிறது. அது அதிகம் என்று திரையுலகில் குரல்கள் கேட்கின்றன.

இந்தநிலையில் டிக்கெட் விலையை அதிகரிக்க வேண்டும் என்று விஜய்சேதுபதி பேசியிருப்பது சரியல்ல. வட மாநிலங்களில், மற்ற மாநிலங்கள் நிலை வேறு. தமிழகநிலை வேறு. நலிந்து வரும் சினிமாவை காப்பாற்ற அவர் தனது சம்பளத்தை, தனது டீம் செலவுகளை குறைக்க வேண்டும். அப்படி செய்தால் படத்தின் பட்ஜெட் குறையும். தயாரிப்பாளர் பாதுகாக்கப்படுவார். அவர் படங்களில் இப்போதைக்கு தலைவன் தலைவி மட்டுமே ஓடியது. பல படங்கள் தோல்வி. அவர் நடித்த சில படங்கள் வியாபாரத்திலும் சிக்கி நிற்கின்றன. இதற்கு படத்தின் பட்ஜெட் முக்கிய காரணம். அவர் சம்பளத்தை தனது வியாபாரத்துக்கு தக்கப்படி குறைந்தாலோ, வருமானத்தில் பகிர்வு என்ற அடிப்படையில் சம்பளம் வாங்கினோலோ அவர் சினிமா தப்பிக்கும். அதை விடுத்து, சினிமா டிக்கெட் விலையை அதிகரிக்க வேண்டும் என்று சொல்வது சரியில்லை. மற்ற எந்த ஹீரோவும் இப்படிப்பட்ட கோரிக்கையை வைக்கவில்லை என விஜய்சேதுபதிக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. அதேசமயம், சினிமா டிக்கெட் விலையை அதிகரித்தால் அது அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், பொதுமக்கள், மீடியா மத்தியில் கடும் விமர்சனங்கள் வரும் என்பதால், அதற்கு உதவ தமிழக அரசும் தயங்குவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !