நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ், பிரீத்தி முகுந்தன்
ADDED : 13 minutes ago
நானி நடிப்பில் கடந்த செப்டம்பர் 24ல் திரைக்கு வந்த படம் தி பாரடைஸ். கயாடு லோஹர் நாயகியாக நடித்த இந்த ஆக் ஷன் படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கினார். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 169 கோடி வசூலித்தது.
அந்த படத்தை அடுத்து தற்போது பிளடி ரோமியோ என்ற படத்தில் நடித்து வருகிறார் நானி. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டில்லியில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நவம்பர் 19ம் தேதி அன்று அங்குள்ள அலுமினியம் தொழிற்சாலையில் தொடங்கவுள்ளது. டார்க் காமெடி ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் இதை சுஜித் இயக்குகிறார். இந்த படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படம் 2027-ஆம் ஆண்டு திரைக்கு வரவுள்ளது.