அஜித்தின் 'டேர் டெவில்' படப்பிடிப்பு இன்று ஆரம்பம்
அஜித் நடிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, அஜித் மனைவி ஷாலினி தயாரிக்கும் 'டேர் டெவில்' படத்தின் படப்பிடிப்பு இன்று(நவ., 11) ஐதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீலீலா, பிரபு, பார்த்திபன், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பூஜை கடந்த வாரம் நவம்பர் 6ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் அஜித் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பின்தான் அவர் துபாயிலிருந்து சென்னை திரும்பினார்.
இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ஆரம்பமாகி இருக்கிறது. தொடர்ந்து அங்கேயே படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம். அஜித் படங்களின் படப்பிடிப்பு வழக்கமாக அங்குதான் அதிகம் நடக்கும்.
அஜித் நடித்து கடைசியாக கடந்த ஆண்டு 'குட் பேட் அக்லி' படம் வெளிவந்தது. அதற்குப் பிறகு அவர் கார் ரேஸில் பிஸியாக இருந்தார். அதனால், இந்த வருடம் அஜித் நடித்த எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. 'டேர் டெவில்' படம் அடுத்த வருட பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.