தமிழில் அடுத்தடுத்த தோல்விகளில் நயன்தாரா
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை, முதலிடத்தில் இருக்கும் நடிகை எனப் பெயரெடுத்தவராக மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகையாக நயன்தாரா இருக்கிறார்.
அவர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன் 2' படம் எதிர்பார்த்த வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. சுமார் 100 கோடி செலவில் தயாராகியுள்ளதாக சொல்லப்படும் இப்படத்திற்கு மற்ற மொழிகளில் சுத்தமாக வரவேற்பு இல்லை. தமிழில் மட்டும் சுமார் 15 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.
தமிழில் நயன்தாரா நடித்து இந்த வருடம் இதற்கு முன்பு வெளிவந்த 'ஹாய்' படமும் வெற்றி பெறவில்லை. கடந்த வருடத்தில் அவர் நடித்த ஒரே படமான 'டெஸ்ட்' படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. அப்படமும் பெரிதாக பேசப்படவில்லை.
2024ல் நயன்தாரா நடித்து ஒரு படமும் வெளியாகவில்லை. 2023ல் 'அன்னபூரணி, இறைவன்', 2022ல் வெளிவந்த 'கனெக்ட், ஓ 2,' ஆகிய படங்களும் வரவேற்பைப் பெறவில்லை. அதே ஆண்டில் வெளிவந்த 'காத்து வாக்குல ரெண்டு காதல்', சுமாரான வெற்றியைப் பெற்றது.
அதற்கு முன்பாக '2021ல் 'அண்ணாத்த, நெற்றிக் கண்', ஆகிய படங்களும், 2020ல் வெளியான 'தர்பார்' படமும் வரவேற்பைப் பெறவில்லை. 2020ல் ஓடிடியில் நேரடியான வெளியான 'மூக்குத்தி அம்மன்' ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
தியேட்டர்களில் வெளிவந்த படங்களில் சிறப்பான வெற்றி என்றால் 2019ல் விஜய் நடித்து வெளியான 'பிகில்' படம்தான் தமிழில் நயன்தாராவுக்கு கடைசியாக பெரிய வெற்றியைக் கொடுத்த படம்.
அதே சமயம் தெலுங்கில் இந்த ஆண்டில் வெளிவந்த 'மனஷங்கர வரபிரசாத் காரு', ஹிந்தியில் 2023ல் வெளிவந்த 'ஜவான்' ஆகிய படங்கள் பெரிய வசூலைப் பெற்ற படங்களாக அமைந்தன. ஆனால் இந்தாண்டு கன்னடத்தில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியான ‛டாக்சிக்' படுதோல்வியை தோல்வியது.