உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மரகத நாணயம் 2'வில் நிக்கி கல்ராணிக்கு அதிக முக்கியத்துவம் : இயக்குநர் தகவல்

'மரகத நாணயம் 2'வில் நிக்கி கல்ராணிக்கு அதிக முக்கியத்துவம் : இயக்குநர் தகவல்


பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் ஆர்டிசி மீடியா இணைந்து தயாரித்துள்ள படம் 'மரகத நாணயம் 2'.

2017ம் ஆண்டு வெளியான 'மரகத நாணயம்' திரைப்படத்தின் மூலம் ஏஆர்கே சரவன் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, வெளியீட்டிற்கு தயாராகி வரும் இதன் இரண்டாம் பாகத்தையும் இவரே எழுதி இயக்கியுள்ளார்.

ஆதி மற்றும் பிரியா பவானி சங்கர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யராஜ், நிக்கி கல்ராணி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், டேனியல் ஆனி போப், அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.

படம் குறித்து இயக்குனர் கூறியதாவது : சாபமிடப்பட்ட மரகதக் கல், குறும்புத்தனமான ஆவிகள், நகைச்சுவை கலந்த சாகசப் பயணம் என முதல் பாகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.

'மரகத நாணயம் 2' படத்தின் முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கிட்டத்தட்ட மீண்டும் இடம்பெற்றுள்ளனர். ஆதி, பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி, டேனியல் ஆனே போப், முனிஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் மற்றும் முருகானந்தம் சார் எனப் பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் இந்தக் கதையில் எப்படி கனெக்ட் ஆகிறார்கள், எந்த இடத்தில் அனைவரும் ஒன்றிணைகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு படம் பார்க்கும்போது சர்ப்ரைஸாக இருக்கும். முதல் பாகத்தில் ரசிகர்கள் ரசித்த அதே நகைச்சுவை, சாகசம், ஆக்ஷன் என அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் அப்படியே இருக்கும். மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களும் உள்ளது.

முதல் பாகத்தில் நிக்கியின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. அதேபோல், இந்தப் பாகத்திலும் அவருடைய கதாபாத்திரம் வலுவானதாகவும் ஸ்பெஷலாகவும் இருக்கும். படம் வெளியாகும்போது அதை ரசிகர்கள் தெரிந்துகொள்வார்கள். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !