உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர்

இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர்

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாய் இதற்கு முன்பு ஆண்ட இரண்டு முக்கிய கட்சிகளைத் தோற்கடித்து முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார் நடிகர் விஜய்.

வாக்கு எண்ணிக்கையின் போது அவரது கட்சி முன்னணியில் வந்து கொண்டிருந்த போதே பல சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். பதவியேற்ற பின் மிச்சம் மீதியிருந்த பிரபலங்களும் வாழ்த்தினார்கள். ஒரு சிலர் மட்டும் இதுவரையிலும் வாழ்த்துகளைத் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் முதல்வர் விஜய்யை நேற்று நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். செயலாளர் விஷால், கொல்கத்தாவில் படப்பிடிப்பில் இருப்பதால் அவர் செல்லவில்லை.

இந்நாள் முதல்வரை சந்தித்த பின், முன்னாள் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளார் நாசர். அவருடன் மனைவி கமீலாவும் உடன் சென்றிருக்கிறார்.

நடிகர் சங்கத்தின் புதிய கட்டடப் பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது. அதன் திறப்பு விழா விரைவில் நடக்கலாம் எனத் தெரிகிறது. அதில் இந்நாள், முன்னாள் முதல்வர்கள் கலந்து கொள்வார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !