உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட்டில் கால் பதிக்கும் அர்ஜூன்தாஸ்

பாலிவுட்டில் கால் பதிக்கும் அர்ஜூன்தாஸ்

'கைதி' படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் அர்ஜூன்தாஸ். 'அந்தகாரம்' என்ற படத்தில் நாயகனாக நடித்தாலும், அதன்பிறகும் அவர் மாஸ்டர், விக்ரம், படங்களில் வில்லனாக நடித்தார். பின்பு மீண்டும் ஹீரோவாகி அநீதி, ரசவாதி, கான் சிட்டி, ஒன்ஸ்மோர் படங்களில் நாயகனாக நடித்தார். இவர் நடிப்பில் மதுமிதா இயக்கத்தில் உருவான 'ஜான் டோ' நேற்று வெளியானது.

இந்த நிலையில் இயக்குநர் மதுமிதா, அர்ஜூன்தாஸை பாலிவுட்டிற்கு அழைத்துச் செல்கிறார். மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'அங்கமாலி டைரீஸ்' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளார் மதுமிதா. இதில் நாயகனாக நடித்திருக்கிறார் அர்ஜூன்தாஸ். அதோடு தனது தனித்துவமான குரலில் ஹிந்தியில் டப்பிங்கும் பேசியிருக்கிறாராம்.

இதுகுறித்து மதுமிதா கூறும்போது நானும் அர்ஜுன் தாஸும் இணைந்து ஒரு பாலிவுட் படத்தில் பணியாற்றி இருக்கிறோம். அது 'அங்கமாலி டைரீஸின்' ஹிந்தி வெர்ஷன். ஆனால் இந்தப் படம் ரீமேக் கிடையாது. அடாப்டேஷன் படம். நிறைய விஷயங்களை மாற்றியிருக்கிறோம். நான் எப்போதும் ரீமேக் படங்களை எடுக்க மாட்டேன். ஒரு இயக்குநர் எடுத்த அதே படத்தை மீண்டும் எடுப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது. அர்ஜுன் தாஸின் முதல் ஹிந்தித் திரைப்படம். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !