உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : எம்.ஆர்.ராதாவால் நடிகரான கண்ணதாசன்

பிளாஷ்பேக் : எம்.ஆர்.ராதாவால் நடிகரான கண்ணதாசன்

கண்ணதாசன் வெறும் பாடலாசிரியரல்ல, கதாசிரியர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல முகங்களை கொண்டவர். கண்ணதாசன் தனது சம்பளத்தையும், அதை செலவு செய்யும் விதத்தையும் வெளிப்படையாக பேசுகிறவர்.

கறுப்புப் பண விவகாரத்தை அடிப்படையயாக வைத்து ஒரு படம் எடுக்க விரும்பினார். அதற்கு 'கருப்பு பணம்' என்று பெயர் வைத்தார். பெரிய நடிகர்களை எதிர்த்து நடிக்கும் துணிச்சல் எம்.ஆர்.ராதாவுக்கு இருப்பதாக அவர் நம்பினார். அவரை சந்தித்து கதை சொன்னபோது நடிக்க மறுத்து விட்டார் 'நான் இந்த படத்தில் நடித்தால் அதன்பின் மற்ற ஹீரோக்கள் படங்களில் சேர்ந்து நடிக்கும்போது எனக்கும், அவர்களுக்கும் தர்மசங்கடமாக இருக்கும்' என்று கூறிவிட்டார்.

எம்.ஆர்.ராதாவே மறுத்த பிறகு யார் நடிக்க முன்வருவார்கள். அதனால் தானே நடிப்பது என்று முடிவு செய்தார். பாலய்யா, கே.பாலாஜி, கேஆர் விஜயா உள்ளிட்ட பலர் நடித்தனர். ஜி.ஆர்.நாதன் இயக்கினார்.

கறுப்புப் பணத்தை சேர்த்து குவித்து வைத்திருக்கும் பணமுதலைகளிடம் இருந்த அந்த பணத்தை பறித்து ஏழை மக்களுக்கு விநியோகம் செய்வது மாதிரியான கதை. 'கருப்பு பணம்' படத்தின் கதை பின்னாளில் அதுபோன்று பல படங்கள் உருவாக காரணமாக அமைந்தன. குறிப்பாக ஷங்கர் இயக்கிய 'ஜென்டில்மேன்' படம் கூட இதை போன்று தான் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !