உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்ச்சையை ஏற்படுத்திய கரீனா கபூரின் மரகத நெக்லஸ்

சர்ச்சையை ஏற்படுத்திய கரீனா கபூரின் மரகத நெக்லஸ்

தீவாவளி கொண்டாட்டத்தின் போது முன்னணி நடிகைகள் விதவிதமாக போட்டோ எடுத்து அதனை தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த தீபாவளியன்று பாலிவுட் நடிகை கரீனா கபூரின் சில போட்டோக்களை அவரது ஆடை வடிவமைப்பாளர் ரியா கபூர் வெளியிட்டிருந்தார்.

அதில், போபால் அரச குடும்பத்துக்கு சொந்தமான 200 ஆண்டுகால பழமையான பெரிய மரகத நெக்லஸை கரீனா கபூர் அணிந்திருந்தார். அதில் குரான் வாசகம் பொறிக்கப்பட்டு இருந்தது. இது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ், கரீனா கபூர் கானுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில் “சமூக வலைத்தளத்தில் மத வாசகம் காட்சிப்படுத்தப்பட்ட விதம், மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட போட்டோக்கள் மற்றும் பதிவுகளை உடனே நீக்க வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கரீனா கபூர் “யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. பதக்கத்தின் ஒருபுறத்தில் 'மா' என்ற வார்த்தையும், மறுபுறத்தில் பெண் தெய்வத்தின் உருவமும் இடம் பெற்றுள்ளது. பதக்கம் தயாரிக்கப்பட்டபோதே எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !