கவனம் ஈர்க்கும் தனி இசை பாடல்கள் : பிரமாண்டமாய் உருவாகும் ‛தமிழ் கடவுள்'
ADDED : 6 hours ago
சூரஜ் குமார் புரொடக் ஷன்ஸ் சார்பில், நடிகர் சூரஜ் குமார் பக்தி பாடல் தயாரிக்கிறார். இவருடன் எஸ்4 ஸ்டுடியோஸ் சார்பில் சதீஷ் குமார் ஒரு இசை ஆல்பத்தை இணைந்து தயாரிக்கின்றனர். தற்போது ‛தமிழ் கடவுள்' என்ற பெயரில் மிக பிரமாண்டமாக முருகன் பாடல் தயாராகிறது. இதில் சூரஜ் குமார் நடித்துள்ளார். விஜய் கிரண் இயக்குவதோடு, ஓளிப்பதிவும் செய்கிறார். சென்னை மற்றும் வேலூரில் இந்த தமிழ் கடவுள் பாடல் எடுத்து வருகின்றனர். சஞ்சய் மாணிக்கம் இசையில் உருவாகும் இப்பாடல் , காலம் கடந்தும் பேசப்படும் முருகப் பெருமான் பாடல்கள் வரிசையில் சேரும் என்கின்றனர் குழுவினர். காதல் பாடல்கள் மாதம் மாதம் வெளியாகும் நிலையில், முருகன் பக்தி பாடலை இந்த குழுவினர் மிகுந்த பொருள் செலவில் தயாரித்து வருகின்றனர். விரைவில் வெளியிட உள்ளனர்.