சாய் அபயங்கர் உடன் தொடர்ந்து பயணிக்க விரும்பும் சிம்பு
ADDED : 6 hours ago
கடந்த வருடத்தில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசனின் 49வது படம் உருவாகுவதாக இருந்தது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக அறிவித்தனர். அதன் பின்னர் சில மாதங்களில் இப்படம் கைவிடப்பட்டது. இதற்கிடையில் இந்த படத்திற்காக சிம்பு, சாய் இணைந்து இரண்டு பாடல்கள் இசையமைத்து வைத்திருந்தனர். தற்போது சிம்பு இந்த பாடல்களைக் கைவிடாமல் தனது வருங்கால படங்களில் எதாவது ஒன்றில் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளராம். மேலும், சிம்பு அரசன் படத்திற்கு பிறகு தான் நடிக்கவுள்ள அடுத்தடுத்த படங்களுக்கு சாய் அபயங்கர் இசையமைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.