கவினின் 11வது படத்தின் அறிவிப்பு வெளியானது
ADDED : 5 hours ago
விஷ்ணு எடவன் இயக்கும் ஹாய் என்ற படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார் கவின். தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை ஒரு இளைஞன் காதலிக்கும் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கண்ணங்குழியா புதைகுழியா குழப்புறியே என்ற முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஹாய் படத்தை அடுத்து கவின் நடிக்கும் பதினோராவது படத்தை பியாண்டு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் தொடங்கப்படும் இந்த படத்தை பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் பணியாற்றிய பிரவீன் பரமசிவம் என்பவர் இயக்குகிறார்.