உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பரத் பாலா - ஏ.ஆர். ரஹ்மான் படம் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்குத் தேர்வு

பரத் பாலா - ஏ.ஆர். ரஹ்மான் படம் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்குத் தேர்வு

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து வந்தே மாதரம் என்கிற புகழ்பெற்ற இசை ஆல்பத்தை உருவாக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பரத் பாலா. அதன்பிறகு 2013-ல் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் படத்தை இயக்கினார். அதற்கும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர்கள் கூட்டணியில் பனாரஸ் திரைப்படம் உருவாகியுள்ளது.

அது தற்போது 2026 இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவுக்குத் தேர்வாகியுள்ளது.. நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் இவ்விழாவில் இப்படத்தின் இந்தியத் திரையிடல் நடைபெற உள்ளது.. அப்பா-மகள் உறவை மையமாகக் கொண்டு உணர்வுபூர்வமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளதுடன் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது இன்னொரு ஆச்சரியத் தகவல்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !